Cinema Updates : கோலிவுட்டில் மும்மரமாக நடக்கும் டப்பிங் பணிகள்.. இன்றைய சினிமா அப்டேட்ஸ் இதோ!
அனைவரின் கவனத்தை ஈர்க்கும் ஸ்கிரீன் பிரசன்ஸை கொண்ட எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் இந்தியன் 2, ராயன் ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. இவர் இந்தியன் 2 படத்தில் கேமியோ ரோலிலும் இந்தியன் 3 படத்தில் முக்கியமான ரோலிலும் கேம் சேஞ்சர் படத்தில் முன்னணி ரோலிலும் நடித்துள்ளார் என இயக்குநர் ஷங்கர் கூறியுள்ளார்.
ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் கேம் சேஞ்சர் படத்தில் ராம் சரண் நடிக்க வேண்டிய காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளது.
குக்கூ, ஜிப்ஸி, ஜோக்கர், ஜப்பான் போன்ற படங்களை இயக்கிய ராஜு முருகன், சசிகுமார், எழு கடல் தாண்டி படத்தில் நடித்த சைத்ரா அச்சரை வைத்து படம் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கு ஷான் ரோல்டன் இசை அமைக்கவுள்ளாராம்.
சந்தானத்தின் நடிப்பில் வெளியாகிய காமெடி ஹாரர் தில்லுக்கு துட்டு சீரிஸின் அடுத்த பாகம் உருவாகவுள்ளது. இது குறித்த அறிவிப்புகள் இனி வரும் நாட்களில் வெளியாகும்.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டப்பிங் பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது
ஜெய ஜெய ஜெய ஹே, குருவாயூர் அம்பலநடையில் போன்ற படங்களை இயக்கிய விபின் தாஸ் ஃபஹத் ஃபாசில், எஸ் ஜே சூர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளதாக தகவல் பரவி வருகிறது.
ரஜினிகாந்தின் வேட்டையன் படத்திற்கான டப்பிங்கில் ஃபஹத் ஃபாசில் ஈடுபட்டுள்ளார்.