Cinema Update : விஜய் 69 படத்தில் மலையாள நடிகையா? இன்றைய சினிமா அப்டேட்ஸ்!
பி எஸ் மித்ரன் - கார்த்தி- எஸ் ஜே சூரியா கூட்டணியில் உருவாகி வரும் படம் சர்தார் 2 . இப்படத்தில் ஆஷிகா ரங்கநாத் இணைந்துள்ளார் என படக்குழு அறிவித்துள்ளது.
கொரடலா சிவா இயக்கத்தில் ஜூனியர் என் டி ஆர் நடித்து வரும் தேவாரா படத்தின் இரண்டாவது சிங்கள் ட்ராக் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் சூரி நடித்துள்ள படம் கொட்டுக்களி.இப்படத்தில் பாண்டி என்ற கதாபாத்திரத்தில் சூரி நடித்துள்ளதாகவும், இது உண்மைக்கு நெருக்கமான படம் என்றும் தனது எக்ஸ் படத்தில் தெரிவித்துள்ளார். இப்படம் வருகின்ற 23 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அஜித் குமார், குட் பேட் அக்லி படத்தை தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடித்து முடித்த பிறகே பிரசாந்த் நீலுடன் இணைந்து பணியாற்ற உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விஜய் நடிக்கவிருக்கும் 69 வது படத்தை வினோத் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் மலையாள நடிகை மமிதா பைஜு நடிக்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.