Cinema update : சிவகார்த்திகேயன் படத்தின் முதல் ஷாட் புகைப்படம்.. டைட்டில் இதுதானா?
மில்லியன் டாலர் ஸ்டுடியோ நிறுவனம் தற்போது ஆர் ஜே பாலாஜி நடிக்கவிருக்கும் புதிய படத்தை தயாரிக்க உள்ளது. இதற்கான போஸ்டரும் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் இதற்கு முன் குட் நைட் , லவ்வர் ஆகிய படங்களை தயாரித்துள்ளது.
சிவகார்த்திகேயனின் 23 வது படத்தை ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். படத்தில் வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க உள்ளதாக படக்குழு அறிவித்தது. படத்தின் எடிட் செய்யப்பட்ட ஃபர்ஸ்ட் ஷாட் புகைப்படம் தற்போது சிங்க நடை என்ற ஹாஷ்டாக் உடன் எக்ஸ் பக்கத்தில் வைரலாகி வருகிறது. படத்தின் டைட்டில் இதுவாக கூட இருக்கலாம் என சொல்லப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் அமீர் நடிப்பில் ஆதம் பாவ தயாரித்து இயக்கிய படம் உயிர் தமிழுக்கு. இந்த படம் வருகின்ற ஜூன் 25 ஆம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
கடந்த மாதம் அர்ஜுன் தாஸ் நடிப்பில் சாந்த குமார் இயக்கத்தில் வெளிவந்த ரசவாதி படம் ஆஹா ஓடிடி தளத்தில் நாளை வெளியாக உள்ளது.
ராகுல் கபாலி இயக்கத்தில் குரு சோமாசுந்திரம் நடித்திருக்கும் பயமறியா பிரம்மை படம் நாளை திரையரங்கில் வெளியாகவுள்ளது.