Cinema Updates : ஓடிடியில் பழைய விக்ரம் படம்.. சுட சுட சினிமா செய்திகள் இதோ!
ராஜசேகர் இயக்கத்தில் 1986ம் ஆண்டு கமல்ஹாசன், அம்பிகா, சத்யராஜ் உள்ளிட்ட பலரிமன் நடிப்பில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'விக்ரம்' படத்தின் விஷுவல் தரம் மேம்படுத்தப்பட்டு டிரைலராக வெளியாகியுள்ளது. இப்படம் OTTயில் வெளியாக வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கையாக இருக்கிறது.
துல்கர் சல்மான் நடித்துள்ளார் 'லக்கி பாஸ்கர்' திரைப்படம் செப்டம்பர் 27ம் தேதி வெளியாக உள்ளது என்ற அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
வசந்த் ரவி, சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'வெப்பன்' திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாக உள்ளது.
ஆர்ஜே பாலாஜி தன்னுடைய சூப்பர்ஹிட் படமான 'மூக்குத்தி முருகன்' படத்தை சீக்வல்லாக வெளியிட திட்டமிட்டுள்ளார். இதில் நடிகை திரிஷா கதாநாயகியாக நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சூர்யா 44 படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ளார் என்றும் அது நடிகர் சூர்யாவின் ரசிகர்களுக்கு மிக பெரிய திரை விருந்தாக அமைய உள்ளது என கூறப்படுகிறது.
இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரத்தின் அந்தமானில் துவங்க உள்ளது என்றும் அதன் ஷெட்யூல் தொடர்ந்து 31 நாட்கள் நடைபெறும் என கூறப்படுகிறது.
நடிகர் ஜெயராம் மற்றும் நாசர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளனர் என தகவல் பரவி வருகிறது
உறியடி படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகர் விஜயகுமார் இப்படத்தில் வில்லனாக நடிக்க உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன