Cinema News: தி கோட் படத்தின் அடுத்த பாடல் எப்போ வரும் என தெரியுமா?
சிம்பு தேவன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள போட் படத்தின் வாடா வா என்ற பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
வெங்கட் பிரபு- விஜய்- யுவன் ஷங்கர் ராஜா கூட்டணியில் உருவாகி வரும் தி கோட் படத்தின் மூன்றாவது பாடல் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் வெளியாகலாம் எனவும், மேலும் படத்தின் இசை வெளியிட்டு விழா ஆகஸ்ட் மாதம் மூன்றாம் வாரத்தில் நடத்தப்பட உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
மகிழ் திருமேனி- அஜித் குமார் கூட்டணியில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. ஹைதராபாத்தில் நடந்து வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இந்த வாரத்தில் நிறைவடைய உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது.
சுமன் குமார் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷ் எம் எஸ் பாஸ்கர் நடித்துள்ள ரகு தாத்தா படத்தை அடுத்த மாதம் 15 ஆம் தேதி வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆனந்த் இயக்கத்தில் உருவாகிவரும் நண்பன் ஒருவன் வந்த பிறகே படத்தில் ட்ரைலர் இன்று காலை 11:11 வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் படத்தின் புதிய தகவல் ஒன்றை 24 ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.