Oppenheimer No VFX : முழு படத்திலும் வி.ஃப்.எக்ஸ் ஷாட் இல்லை..ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஓப்பன்ஹெய்மர் படக்குழு!
உலக சினிமா கண்ட தலைசிறந்த இயக்குனர்களில் ஒருவரும், வித்தியாசமான கதைக்களங்களை உருவாக்க கூடியவருமான பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன்.
தொடர்ந்து வார்னர் ப்ரோஸ் நிறுவனத்திற்காக மட்டுமே படங்களை இயக்கி வந்த நோலன், அதிலிருந்து வெளியேறி முதன்முறையாக வேறு ஒரு நிறுவனத்திற்காக படத்தை இயக்கியுள்ளார்.
இவர் தற்போது அனு ஆயுதத்தைக் முதல் முதலில் கண்டுபிடித்தவரான ஒப்பன்ஹேய்மரின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி வருகிறார்.
அணுகுண்டு பற்றிய முதல் திரைப்படம் இது என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு மிகுதியாக உள்ளது.
அணுகுண்டின் தந்தை என அழைக்கப்படும் ஓப்பன் ஹெய்மர் கதாபாத்திரத்தில், பீக்கி பிளைண்டர்ஸ் சீரிஸ் மூலம் கவனம் ஈர்த்த சில்லியன் மார்பி நடித்துள்ளார்.
முக்கியமாக இப்படத்தில் பிரமாண்ட காட்சிகள் கிராபிக்ஸை பயன்படுத்தாமல் தத்ரூபமாக படமாக்கப்பட்டுள்ளது. வி.ஃப்.எக்ஸ் பயன்படுத்தாமல் டிரினிட்டி அணுகுண்டு சோதனையை இப்படத்தில் முயற்சி செய்துள்ளார்கள்.