Jawan Trailer : ரசிகர்கள் ஹேப்பி அண்ணாச்சி...விரைவில் வெளியாகும் ஜவான் படத்தின் ட்ரெய்லர்!
ஜோன்ஸ் | 08 Jul 2023 02:32 PM (IST)
1
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக இருப்பவர் அட்லீ. இவர் தற்போது இந்தியில் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார்.
2
இந்த படத்தில் ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா, தீபிகா படுகோன், சஞ்சய் தத், பிரியா மணி, யோகி பாபு, சுனில் குரோவர் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
3
அனிருத் இசையமைக்கும் இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு, ஆகிய 3 மொழிகளில் வெளியாகவுள்ளது.
4
ஏற்கனவே இப்படத்தின் ஆடியோ உரிமத்தை டி சீரிஸ் நிறுவனம் சுமார் 36 கோடி ரூபாய் கொடுத்து பெற்றுள்ளதாக தகவல் வெளியானது.
5
தற்போது இப்படத்தின் டிரெய்லர் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
6
ஜவான் படத்தின் டிரெய்லர் ஜூலை 12 அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக நெருங்கிய திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.