Chris Evans Marriage : 26 வயது இளம் பெண்ணை மணந்த கேப்டன் அமெரிக்கா நடிகர்!
அமெரிக்க நடிகர் கிறிஸ் எவான்ஸை பலருக்கும் பிடிக்கும். அதிலும் இவருக்கு பெண் ரசிகர்கள் ஏராளம் என்றே சொல்லலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃபெண்டாஸ்டிக் ஃபோர், கேப்டன் அமெரிக்கா : தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர், அவெஞ்சர்ஸ் : ஏஜ் ஆட் அல்ட்ரான், ஆண்ட் மேன், கேப்டன் அமெரிக்கா : சிவில் வார், ஸ்பைடர் மேன் ஹோம் கம்மிங், அவெஞ்சர்ஸ் : இன்ஃபினிட்டி வார், கேப்டன் மார்வெல், அவெஞ்சர்ஸ் : எண்ட் கேம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில், போர்த்துகீசிய நடிகையான அல்பா பாப்டிஸ்டாவை நீண்ட நாளாக காதலித்து வருவதாக அறிவித்தார். இவர்களின் காதல் டைம் பாஸிற்கு அல்ல என்றும் இது மிகவும் சீரியஸான உறவு என்றும் பிறகு தெரியவந்தது.
தற்போது நெருங்கிய வட்டாரங்களுக்கு மத்தியில் செப்டம்பர் 9 மற்றும் 10 ஆம் தேதியில் இவர்களின் திருமணம் நடந்துள்ளது.
இந்த திருமண நிகழ்ச்சியில், மார்வெல் நடிகர்களான ராபர்ட் டௌனே ஜே ஆர், கிறிஸ் ஹெம்ஸ்வொர்த், ஜான் கிரசின்சுகி மற்றும் எமிலி பிளண்ட் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கிறிஸ் எவான்ஸின் மனைவிக்கு 26 வயது என்பதும் இருவருக்கும் 16 வயது வித்தியாசம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -