Sarath kumar Fitness : ப்பா..இந்த வயதிலும் இவ்ளோ ஃபிட்டா இருக்காரே..வைரலாகும் சரத் குமாரின் ஃபிட்னஸ் வீடியோ!
சரத்குமார் தனது சமூக வலைதள பக்கங்களில் வொர்-அவுட் செய்யும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.
தனது 18 வயது முதல் உடற்பயிற்சியை விடாமல் செய்து வரும் இவர், இன்றைய இளைஞர்களுக்கு ஃபிட்னஸ் ரோல் மாடலாக விளங்கி வருகிறார்.
சமீப காலத்தில் இவர் நடித்த பொன்னியின் செல்வன், போர் தொழில், பரம்பொருள் ஆகிய படங்களில் நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் ஆதரவை பெற்றார்.
இப்போது தனது அடுத்த படத்திற்காக தன்னை உடல் அளவில் தயார் ஆக்கி வருகிறார்.
இதுகுறித்த வீடியோவை பதிவிட்டு, “நான் நடிக்கும் அடுத்த படத்திற்கு இன்னும் ஃபிட்டாக இருக்க வேண்டும். எனது பயிற்சியாளர் மற்றும் நல்ல நண்பரான பெங்களூருவை சார்ந்த புனித், எனக்கு தேவையானவற்றை பார்த்து கொள்கிறார். வொர்க்-அவுட் மற்றும் டயட் சார்ந்த விஷயங்களில் என்னை நன்றாக வழி நடத்துகிறார். படப்பிடிப்பு தொடங்கியது, படக்குழுவுடன் ராஜஸ்தானில் உள்ள ஜெய்சல்மரில் இணையவுள்ளேன்.” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த வீடியோ சரத்குமார் ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.