சித்தா,சந்திரமுகி 2, இறைவன்.. மூன்று படத்தில் எதை பார்க்கலாம்?
அஹமத் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான இறைவன் படத்தில் ஜெயம் ரவி, நயன்தாரா உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏ சான்றிதழ் பெற்ற, சைகோ திரில்லர் படமான இறைவனை உறுதியான நெஞ்சம் கொண்டவர்கள் தாராளமாக பார்க்கலாம். இதயம் பலவீனம் ஆனவங்க தியேட்டர் பக்கம் போய்டாதீங்க...
ரஜினிகாந்த், ஜோதிகா உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான சந்திரமுகி முதல் பாகத்தின் தொடர்ச்சியாக, இரண்டாம் பாகம் 17 ஆண்டுகளுக்கு பின் வெளியாகியுள்ளது. இதில் ராகாவா லாரன்ஸ், கங்கனா, லக்ஷ்மி மேனன் ஆகிய பலரும் நடித்துள்ளனர்.
விடுமுறை நாட்களை குழந்தைகளுடன் கழிக்க வேண்டும் என ஆசைப்படும் ஃபேமிலி ஆடியன்ஸ் இந்த படத்திற்கு செல்லலாம்.
சித்தார்த், நிமிஷா சஜயன் காம்போவில் உருவான படம் சித்தா. சமூக அக்கறை கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த கருத்துடன் நல்ல ஒரு சினிமா அனுபவத்தை பெற, சித்தா படத்திற்கு செல்லலாம்.