Coolie : ரத்னகுமாருக்கு டாட்டா காட்டிய லோக்கி.. இந்த முறை யாருடன் கூட்டணி தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் 'தலைவர் 171' படத்திற்கு 'கூலி' என தலைப்பிடப்பட்டுள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்
தலைவர் 171 படத்தின் டைட்டில் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமுடன் இருந்த ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் நேற்று டைட்டில் ப்ரோமோ வெளியானது.
இப்படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதும் பணியை சந்துரு அன்பழகன் மேற்கொள்ள உள்ளார் என்ற அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
சந்துரு அன்பழகன் ஏற்கனவே லோகேஷ் கனகராஜுடன் இணைந்து 'மாநகரம்' படத்தில் பணியாற்றியுள்ளார்
மேலும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தின் வசனத்தையும் சந்துரு அன்பழகன் தான் எழுதி இருந்தார்
லியோ படத்தில் லோகேஷ் கனகராஜுடன் பணியாற்றிய இயக்குனர் ரத்னகுமார் 'கூலி' படத்தில் பணியாற்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது