Ramoji Rao Condolence : ராமோஜி ராவ் காரு மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்!
ஹைதராபாத்தில் அமைந்துள்ள மிகவும் பிரபலமான ராமோஜிராவ் பிலிம் சிட்டியில்தான் ஏராளமான திரைப்படங்கள் படமாக்கப்பட்டு வருகின்றன.
அதன் உரிமையாளரும் ஊடகவியலாளரும் தொழிலதிபருமான செருகூரி ராமோஜி ராவ் இன்று அதிகாலை 4.50 மணி அளவில் காலமானார். அவருக்கு வயது 87.
வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
அவரின் மறைவு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் தங்களின் இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.
கேம் சேஞ்சர் படக்குழுவினர் ராமோஜி ராவ் காருவுக்கு இரங்கலை தெரிவித்து கொண்டனர்.
பத்திரிகை, சினிமா, அரசியலில் சிறந்த கிங் மேக்கராக வரலாறு படைத்த ராமேஜி ராவ் மறைவு செய்தியை கேட்டு நான் மிகவும் வருத்தமடைந்தேன் - ரஜினிகாந்த்.
மிகவும் பிரபலமான இசையமைப்பாளர் கீரவாணி மற்றும் எஸ்.எஸ். ராஜமௌலி , ராமோஜிராவ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.