Celebrities Birthday : நடிகை பூமிகாவிற்கும் சனா கானிற்கும் இன்று பிறந்தநாள்!
சிறு வயது நண்பர்கள் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தால் எப்படி இருக்கும் என்பதை காட்டிய பத்ரி படத்தில் ஜானுவாக நடித்தவர் பூமிகா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதமிழில் ஹிட்டான குஷி, கில்லி உள்ளிட்ட படங்களின் தெலுங்கு வெர்ஷனிலும், ஆல் டைம் ஃபேவரட்டான ஜில்லுனு ஒரு காதலில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் விரல் விட்டு எண்ணக்கூடிய படங்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் எக்கசக்கமான படங்களில் நடித்துள்ளார். இதுபோக பஞ்சாபி, போஜ்புரி, கன்னட, மலையாள மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
பாலிவுட் நடிகையான சனா கான், சிலம்பாட்டம் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
தம்பிக்கு எந்த ஊரு, பயணம் உள்ளிட்ட படங்களில் நடித்த இவர் ஹிந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசனில் போட்டியாளராகவும் பங்கேற்றார்
திருமணத்திற்கு பின்னர், சினிமா துறையை விட்டு விலகி பிசினஸ் செய்து வருகிறார். இவருக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -