Glimpse Week : சினிமா ரசிகர்களுக்கு தீனி போடும் விதமாக அடுத்தடுத்து வரும் அப்டேட்டுகள்!
இந்த மாதம் தொடக்கம் முதலே சினிமா ரசிகர்களுக்கு அப்டேட் மேல் அப்டேட் வந்து சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. லியோ படத்தின் நா ரெடி பாடல், ஜெயிலர் படத்தின் காவாலா பாடல் என்று அடுத்தடுத்து அப்டேட்டுகள் வந்து கொண்டே இருக்கிறது.
அதுமட்டுமின்றி மிஷன் இம்பாசிபிள், மாவீரன் போன்ற பெரிய படங்களும் வெளியாகி ரசிகர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை கொடுத்தது. தற்போது இந்த வாரமும் 4 முக்கியமான படங்களின் அப்டேட் வெளியாக உள்ளதால் ரசிகர்களுக்கு இந்த மாதம் சிறப்பன மாதமாக அமைந்துள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் இசையமைப்பில் தனுஷ் நடிக்கும் படம் கேப்டன் மில்லர். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக ஜூலை 28 ஆம் தேதி க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
அஸ்வானி தத் தயாரிப்பில் அஸ்வின் இயக்கத்தில் சந்தோஷ் நாராயணன் இசையில் பிரபாஸ், கமல் போன்ற பல பிரபலங்கள் நடிப்பில் உருவாகிவரும் படம் ப்ராஜெக்ட் கே. இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ நாளை வெளியாகும் என அதிகாரபூர்வமான தகவல் வெளியாகியுள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ஜெயிலர். இந்தப் படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது மீண்டு ஒரு அப்டேட் இந்த வாரம் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பல கோடி ரூபாய் செலவில் எடுக்கப்படும் படம் கங்குவா. இந்த படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ ஜூலை 23 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.