Netflix New Policy : இனி நெட்பிளிக்ஸ் கணக்கை நண்பர்களுடன் ஷேர் செய்ய முடியாது... புது ரூல்ஸ் மூலம் அதிரடி காட்டும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம்!
கொரோனா காலத்திற்கு பிறகு இந்தியாவில் ஓடிடி தளங்கள் அசுர வளர்ச்சி அடைந்தன. அதில், அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட்ஸ்டார் போன்ற பயன்பாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅந்தவகையில், உலக அளவில் மிகவும் பிரபலமான ஓடிடி நிறுவனமான நெட்ஃபிளிக்ஸ், கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது.
நெட்ஃபிளிக்ஸில் வருடம் மற்றும் மாதம் என பல்வேறு விதமான சந்தா திட்டங்களை பயன்படுத்தி, நெட்பிளிக்ஸில் வெளியாகும் வீடியோக்களை பயனாளர்கள் கண்டு ரசிக்கலாம்.
ஒரே கணக்கிற்கு இரண்டு பேர் சேர்ந்து சந்தா செலுத்தி அதனை பயன்படுத்துவது என பல்வேறு வகையில், ஒரே நெட்பிளிக்ஸ் கணக்கு பலரால் பகிர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் வருவாய் இழப்பை சந்திக்க, நெட்பிளிக்ஸ் நிறுவனம் புதிய நடைமுறையை கொண்டு வந்துள்ளது.
தற்போது ஒரே வீட்டில் வசிக்கும் நபர்களால் மட்டுமே இனி நெட்பிளிக்ஸ் கணக்கிற்கான பாஸ்வேர்டை பகிர முடியும். வேறு நபர்களுடன் பாஸ்வேர்டை பகிர்ந்தால் பயனாளர்களிடமிருந்து அதற்கான கட்டணம் வசூலிக்கப்படும் என நெட்பிளிக்ஸ் அறிவித்துள்ளது.
இந்த புதிய நடைமுறையை இன்று முதல் அமல்படுத்தியது நெட்பிளிக்ஸ். அமெரிக்காவில் விளம்பரம் வராமல் படம் பார்ப்பதற்கு மாததிற்கு 10 டாலர் செலுத்தி வருகின்றனர். இது போல் இந்தியாவிலும் புது விதி கொண்டு வரப்படலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -