Bombay Jayashri : பாம்பே ஜெயஸ்ரீ உடல்நிலை இப்போ எப்படி இருக்கு..? அவரே தந்த அப்டேட்..!
ஜெயஸ்ரீ கடந்த மார்ச் மாதம் இங்கிலாந்து நாட்டுக்கு இசைக்கச்சேரி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த நிலையில், அங்கு மயங்கிய நிலையில் மீட்கப்பட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதொடர்ந்து, மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு காரணமாக லண்டன், லிவர்பூல் நகரில் உள்ள மருத்துவமனையில் பாம்பே ஜெயஸ்ரீ கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
கோமா நிலையில் இருந்த பாம்பே ஜெயஸ்ரீக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டியுள்ளதாகவும், சென்னைக்கு விமானம் மூலம் அவர் விரைவில் அழைத்து வரப்படுவார் என்றும் தகவல்கள் வெளியாகின.
தொடர்ந்து பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவர் தொடர்ந்து சிகிச்சைப் பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில், முன்னதாக தன் உடல்நிலை பற்றி பாம்பே ஜெயஸ்ரீ தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “உங்கள் பிரார்த்தனை, வாழ்த்துகளால் நான் நன்றாக உடல்நலம் தேறி வருகிறேன். தொடர்ந்து அவற்றைக் கொடுத்துக் கொண்டே இருங்கள்” எனப் பதிவிட்டுள்ளார்.
இந்த டீவீட்டை பார்த்த அவரது ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -