Dada Movie : 50 நாட்களை நிறைவு செய்த கவினின் டாடா திரைப்படம்!
பிப்ரவரி 10ஆம் தேதி அன்று டாடா திரைப்படம் ரிலீஸ் ஆனது.
மணியை காதலிக்கும் சிந்து எதிர்பாராத விதமாக கர்பமாகிறார். இருவரும் திருமணம் செய்து கொள்கின்றனர். மணி, திருமணத்திற்கு பிறகும் ஊதாரியாகவே சுற்றுகிறார். இதனால் இருவரும் பிரிகின்றனர்.
பின், குழந்தையை வளர்க்கும் முழு பொறுப்பும் நாயகனிடத்தில் வருகிறது. அதுவரை ஊதாரியாகவும் பொறுப்பற்றும சுற்றித்திரிந்த மணி, தனது குழந்தைக்கு நல்ல அப்பாவாக இருக்க முயற்சி செய்கிறார். சிந்து குழந்தையை விட்டு பிரிந்தது ஏன்? போன்ற பல கேள்விகளுக்கு அழகான பதிலாக வருகிறது டாடா படத்தின் க்ளைமேக்ஸ்.
டாடா படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பயன்படுத்தி நன்றாகவே ஸ்கோர் செய்கிறார், கவின். குறிப்பாக பாசப்போராட்ட காட்சிகளிலும், க்ளைமேக்ஸில் வாயில் கைவைத்து அழும் காட்சிகளின் ரசிகர்களின் கண்களையும் நனையவைத்து விடுகிறார்.
பீஸ்ட் திரைப்படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் ரசிகர்களை ரசிக்க வைத்த நாயகி அபர்ணா, டாடா படத்திற்கு இரண்டாவது தூணாக அமைந்தார்.
திரையரங்கில் வெளியான இப்படம் ஓடிடியிலும் வெளியானது. இன்றுடன் டாடா திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் நிறைவாகிறது.