நான் யாருக்கும் எந்த துரோகமும் பண்ணல மாஸ்டர்! கடவுள் காப்பாத்துவாரு; அஜித்தின் எமோஷனல் பகிர்வு!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். கிட்டத்தட்ட 31 ஆண்டுகளாக பெரிதாக எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காமல் தான் உண்டு, தன்னுடைய வேலை உண்டு என்று கோடி கணக்கில் சம்பாதித்து, மனைவி - குழந்தைகளுடன் ராஜ வாழ்க்கை வாழ்கிறார்.
சினிமாவில் நடிப்பது மட்டுமின்றி பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸிலும் வித்தகராக திகழ்கிறார். மேலும் துப்பாக்கி சுடுதலில் அதிக ஆர்வம் காட்டிய அஜித், தக்ஷா டிரோன் குழுவிற்கு வழிகாட்டியாக செயல்பட்டார்.’
அடுத்த ஆண்டு போர்ஸ்சி 992 ஜிடி3 பிரிவிலான கார் ரேஸ் போட்டியில் அஜித் கலந்து கொள்ள ஆயத்தமாகி வருகிறார். அண்மையில், இந்த ரக காரை பரிசோதனை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த காரின் கியரை சற்று மாற்றினால் அந்த கார் ஜெட் வேகத்தில் பறக்கும் வகையில் அதிக ஸ்பீடு கொண்டது.
இந்த நிலையில் தான் பைக் ரேஸ் மாஸ்டர் சுப்ரீம் சுந்தர், அதிவேகமாக ரேஸ் போறது எல்லாம் ஆபத்து தானே என்று அஜித் குமாரிடம் கேட்டேன். அதற்கு அஜித், இல்ல மாஸ்டர், பைக் மற்றும் கார் ரேஸ் என்று எதுவாக இருந்தாலும் நான் முறையாக பயிற்சி எடுத்த பிறகு தான் ரேஸ் மேற்கொள்வேன். அப்படி ரேஸ் மேற்கொள்ளும் போது 90 சதவிகிதம் விபத்து ஏற்படாது. எஞ்சிய 10 சதவிகிதம் இயற்கையாக நடக்கும் விபத்து.
நான் யாருக்கும் எந்த துரோகமும் பணணினது கிடையாது. அப்படியிருக்கும் போது எனக்கு ஒன்னும் நடக்காது. கடவுள் இருக்காரு. அவர் காப்பாற்றுவார். எனக்காக நீங்க கடவுளிடம் வேண்டிக் கொள்ளுங்கள். நீங்க இருக்கும் போது எனக்கு எந்த கவலையும் இல்லை மாஸ்டர் என்று கூறியுள்ளார் என அஜித் கூறியதை தற்போது சுப்ரீம் சுந்தர் பகிர்ந்து கொண்டுள்ளார்.
துணிவு படத்திற்கு பிறகு அஜித் குமார் நடிப்பில் எந்த படமும் வெளிவரவில்லை. தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களில் நடித்து வருகிறார். இதில் விடாமுயற்சி படத்தை மகிழ் திருமேனி இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜூன், த்ரிஷா, ரெஜினா கஸாண்ட்ரா, ஆரவ், ஷா ரா, நிகில் நாயர், வட்சன் சக்கரவர்த்தி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.
இந்த படம் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே போன்று தான் குட் பேட் அக்லி படம் வரும் 2025 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது. எது எப்படியோ 2025 ஆம் ஆண்டு அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான ஆண்டாக இருக்கும்.