✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

கில்லி முதல் பாபநாசம் வரை.. ஒர்ஜினல் படத்தை மிஞ்சிய தமிழ் ரீமேக் படங்கள்!

தனுஷ்யா   |  19 Apr 2023 01:37 PM (IST)
1

பொழுபோக்கிற்காக நடத்தப்பட்ட நாடகங்கள் காலப்போக்கில் உருமாகி சினிமா எனும் பெருந்துறையாக உயர்ந்து நிற்கிறது. ஒரு படம், ஹிட்டான பின்னர் அதே படத்தை மற்ற மொழியில் ரீமேக் படமாக எடுப்பது வழக்கம். அதில் ஒரு சில படங்கள் சுமராக இருக்கும், சில படங்கள் சூப்பராக இருக்கும். அந்தவகையில், சூப்பர் ஹிட்டான தமிழ் ரீமேக் படங்களை காணலாம்.

2

2003ல் மகேஷ் பாபு- த்ரிஷா ஆகிய இருவரின் காம்போவில் வெளியான ஒக்கடு படம் தமிழில் கில்லி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு 2004 ஆம் ஆண்டு வெளியானது. இப்போது விஜய்க்கு பல ரசிகர்கள் உள்ளது போல், இப்படத்திற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத படங்களின் பட்டியலில் இது அடங்கும்.

3

மலையாளத்தில் மணிசித்திரதாழ் என்று வெளியான படத்தை, சந்திரமுகி என்ற பெயரில் ரீமேக் செய்தவர் வாசு. ஓராண்டு காலம் வரை தியேட்டரில் ஓடிய இப்படத்தை, வருடா வருடம் வரும் தீபாவளி பண்டிகைக்கு ஒளிபரப்பு செய்தே ரீலை தேய்த்து விட்டனர்.

4

முன்பு வொர்க்-கவுட்டான மகேஷ் பாபு செண்டிமெண்ட் போக்கிரி படத்திலும் பளித்தது. ரவுடிகளை அழிப்பதற்கு ரவுடிகளுள் ஒருவராக உருமாறும் விஜய்யின் நடிப்பும் அதிரடியான பாடல்களும் இந்த படத்தை செம ஹிட்டாக்கியது.

5

தெலுங்கு டூ தமிழ் ரீமேக் படங்களில் நடித்து வந்த ஜெயம் ரவியின் மற்றொரு சிறந்த காதல் படமாக சந்தோஷ் சுப்பிரமணியம் அமைந்தது. அப்பா மகன் சந்தோஷும், க்யூட் ஹாசினியும் படத்தின் ஹைலைட்டாக அமைந்தனர்.

6

மோகன் லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியான த்ரிஷ்யம், உலகெங்கும் இருக்கும் இயக்குநர்களை ஈர்த்தது. தமிழில், முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த கமல்ஹாசன் தான் தேர்வு செய்த ரோலுக்கு நியமாக நடித்து அசத்தினார்.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • கில்லி முதல் பாபநாசம் வரை.. ஒர்ஜினல் படத்தை மிஞ்சிய தமிழ் ரீமேக் படங்கள்!
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.