Vinusha Devi : ‘நிக்சன் மீதான மரியாதை போய்விட்டது..’ கடுப்பான வினுஷா தேவி!
மக்கள் பலருக்கும் பிடித்த பாரதி கண்ணம்மா சீரியலில் ஹீரோயினாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்பிரியனுக்கு பதிலாக சின்னத்திரையில் அறிமுகமானவர்தான் வினுஷா தேவி.
டிக்டாக் செயலில் பல வீடியோக்களை பதிவிட்டு மக்களிடையே பிரபலமானதால், இவருக்கு இந்த வாய்ப்பு கிடைத்தது.
பாரதி கண்ணம்மா முதல் பாகத்தின் முடிவை தொடர்ந்து இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்தார் வினுஷா. டி.ஆர்.பி ரேட்டிங் குறைந்ததால் இந்த சீரியல் முடிவுக்கு வந்தது.
இதன் பிறகு பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் போட்டியாளரக களமிறங்கினார். இருப்பினும் அவர் அங்கிருந்து ஒரு சில நாட்களிலேயே வெளியேறினார்.
இந்நிலையில், வினுஷா குறித்து நிக்சன் பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இதற்கு பதிலளிக்கும் வகையில், “நான் பிக்பாஸ் வீட்டில் இப்போது இல்லாமல் இருக்கலாம். இருப்பினும் ஒரு விஷயம் குறித்து நான் பேச விரும்புகிறேன். பிக்பாஸ் தொடங்கிய முதல் வாரத்தில் எனக்கும் நிக்சனுக்கும் நல்ல இனக்கம் இருந்தது. நான் அவரை சகோதரனாக கருதினேன். நானும் அப்படிதான் நடந்து கொண்டேன். அவர் என்னை கேலி செய்யும் போது, இவர் விளையாட்டுக்குதான் இப்படி செய்கிறார் என்று நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. காலம் செல்ல, அளவை தாண்டி அவர் பேச ஆரம்பித்தார். அவரின் செயல் என்னை துன்புறுத்தியதால், அவரிடம் இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று சொன்னேன். இதனால் அவரை நான் நாமினேட் செய்தேன். ஒரு நாள் அவர் என்னிடம் மன்னிப்பு கேட்டார். ஆனால், அது கேலி செய்ததற்காக மட்டுமே. உருவ கேலி செய்ததற்காக அல்ல. 1.நிக்சன் என்னிடம் மன்னிப்பு கேட்கவில்லை. என்னை உருவ கேலி செய்தார் என்றும் என்னிடம் சொல்லவில்லை. 2.அவர் எனக்கு இதை பற்றி தெரியும் என்று சொல்கிறார். இது எனக்கு தெரியாது. அவர் சொல்வது பொய். 3.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே எனக்கு இந்த விஷயம் தெரியவந்தது. 4.அவர் இப்போது என்னிடம் மன்னிப்பு கேட்பதால், அவர் நல்லவர் ஆகிவிட மாட்டார். 5.என்னை பற்றி தப்பாக பேசியது நிஜமாக ஜோக் கிடையாது என்று அனைவரையும் கேலி செய்யும் கேங்கிடம் தெரிவித்துக்கொள்கிறேன். 6.உரிமை குரல் என்று பேசிய பெண்ணியவாதிகள் எங்கே.? எனக்காக குரல் கொடுத்ததற்கு நன்றி விச்சு மா.. பிக்பாஸ் வீட்டில் இருந்த போது எனக்கு நிக்சன் மீது பெரும் மரியாதை இருந்தது. என்னை புண்படுத்திய போதும், அவரை என் தம்பியாக நினைத்தேன். இப்போது அனைத்து வீடியோக்களையும் பார்த்த பின் அவர் மீதான மரியாதை எல்லாம் காணாமல் போய்விட்டது. இந்த வார இறுதியில் கமல் சார் இது குறித்து பேசுவார் என்று நம்புகிறேன்.. நிக்சனுக்கு எதிராக நிற்பவர்களுக்கும் எனக்கு ஆதரவு தெரிவிப்பவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.” என வினுஷா தன் இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.