Bigg Boss 7 Tamil : வெளியே போன இருவர்..உள்ளே வந்த ஐவர்..இனிமே பிக்பாஸ் வீட்டில் ரகளைதான்!
பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் முதல் வாரத்தில் அனன்யா ராவ் எலிமினேட் செய்யப்பட்டார். அடுத்த நாளே பவா செல்லதுரை தாமாகவே நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இரண்டாவது வாரத்தில் யாரும் அனுப்பப்படாத நிலையில், மூன்றாவது வாரத்தில் மஞ்சள் அட்டை வாங்கிய விஜய் வர்மாவை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். நான்காவது வாரத்தில் வினுஷா - யுகேந்திரன் ஆகிய இருவரும் டபுள் எலிமினேஷன் முறையில் வெளியேற்றப்பட்டனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினி ஹரிபிரியனுக்கு பதிலாக கண்ணம்மாவாக நடித்து பிரபலமான வினுஷாவும், மலேசியா வாசுதேவனின் மகனான யுகேந்திரனும் இவ்வளவு சீக்கரமாக வெளியேறியது அவர்களின் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
இவர்கள் வெளியே சென்ற பின், வைல்ட் கார்ட் எண்ட்ரியில் பல நபர்கள் வருகை தந்தனர். எப்போதும் இம்முறையில் ஒரு நபர்தான் வருவர். ஆனால், இம்முறை ஒரேடியாக 5 நபர்களை அனுப்பி வைத்து அழகு பார்த்துள்ளது பிக்பாஸ். ஆங்கில வார்த்தைகளை தமிழில் கூகுள் ட்ரான்ஸ்லேட் செய்து இன்ஸ்டாவில் வேடிக்கை காட்டும் ஆர்.ஜே. பிராவோ வருகை தந்தார்.
பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடி செய்யும் அன்ன பாரதி என்ட்ரி கொடுத்தார்.
தொகுப்பாளினியாக இருந்து சீரியல்களில் நடித்து வரும் வி.ஜே.அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு வந்தார்.
மஹான், பிரிவோம் சந்திப்போம்,புதுக்கவிதை, பூவே பூச்சூடவா, செம்பருத்தி, நாச்சியார்புரம், ஈரமான ரோஜாவே, கார்த்திகை தீபம் ஆகிய சீரியல்களில் நடித்த தினேஷ் கோபாலசாமியும் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்றுள்ளார்.
பிரபல கானா பாடகர், கானா பாலா பாடிக்கொண்டே உற்சாகமாக வருகை தந்தார். முன் குறிப்பிட்ட ஐந்து பேரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை சுவாரஸ்யமாக்குவார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -