Vanitha Vijayakumar : வனிதா விஜயகுமாரை தாக்கிய ப்ரதீப் ஆண்டனியின் ஆதரவாளர்..வனிதா பரபரப்பு புகார்..!
சுபா துரை | 26 Nov 2023 12:51 PM (IST)
1
நட்சத்திர தம்பதியான விஜயகுமார் - மஞ்சுளாவின் மகள் நடிகை வனிதா விஜயகுமார். சில படங்களில் நடித்த இவர் பிக் பாஸ் தொடரில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.
2
இவருக்கு ஒரு மகனும் இரு மகள்களும் உள்ளனர்.
3
வனிதாவின் மூத்த மகளான ஜோவிகா, தற்போது நடைபெற்று வரும் பிக் பாஸ் சீசன் 7இல் பங்கேற்று விளையாடி வருகிறார்.இந்த நிகழ்ச்சிக்கு வனிதா ரிவ்யூவும் செய்து வருகிறார்.
4
இந்த போட்டியில் கலந்து கொண்ட பிரதீப் ஆண்டனி பல காரனங்களால் ரெட் கார்ட் கொடுத்து வெளியேற்றப்பட்டார்.
5
தற்போது நேற்று இரவு வனிதா விஜயகுமாரை அடையாளம் தெரியாத ஏதோ மர்ம நபர் தாக்கியதாக சமூக வலைதளங்களில் புகார் தெரிவித்துள்ளார்.
6
மேலும் தாக்கியவர், “ரெட் கார்ட் கொடுக்கிறீங்களா..? அதுக்கு நீ சப்போர்ட் வேற” என்று கூறி வனிதாவின் முகத்தில் தாக்கிவிட்டு ஓடியதாக புகார் அளித்துள்ளார்.