Sakshi Agarwal: பிக்பாஸ் சாக்ஷி அகர்வாலுக்கு திடீர் என நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா?
சினிமாவில் சாதிக்க நினைக்கும் பலருக்கு, ஏணியாக இருந்து உதவியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. கடந்த 2019-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களின் ஒருவர் தான், சாக்ஷி அகர்வால்.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கு முன்பே சில ராஜா ராணி, திரைப்படத்தில் அறிமுகமாகி இருந்தாலும் அந்த படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெறவில்லை. தமிழில் அறிமுகமான கையேடு தெலுங்கில் சாஃப்ட்வேர் கண்டா என்கிற படத்தில் நடித்தார். ஆனால் கண்டனமும் நிலையில் மீண்டும் தமிழில் சைடு ஆர்ட்டிஸ்ட் கிடைத்தாலும் பரவாயில்லை என யோகன் திருட்டு விசிடி, ஆத்யன் போன்ற படங்களில் நடித்தார். ஆனால் இவர் நடித்த ஒரு படங்கள் கூட சரியாக போகவில்லை.
இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில், 2018-ஆம் ஆண்டு வெளியான காலா படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பாம்போ மருமகளாக நடித்தார். இந்த படம் ஓரளவு கவனிக்கப்பட்ட நிலையில் தான் பிக்பாஸ் நிகழச்சியில் களமிறங்கினார். பிக்பாசில் இவர் கொடுத்த காதல் கன்டென்ட் பரபரப்பாக பேசப்பட்டாலும், கவின் - லாஸ்லியா காதல் முன் புஷ்வாணமானது.
தொடர்ந்து முன்னணி இடத்திற்கு வர முட்டி மோதிய சாக்ஷி அகர்வால், தற்போது தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக அறிவித்துள்ளார். இவர் திருமணம் செய்து கொண்டுள்ளது, இவருடைய பால்ய நண்பர் என்றும் அவரின் பெயர் நவ்நீத் என்றும் தெரிவித்துள்ளார். இவர் ஒரு தொழிலதிபர் என கூறப்படும் நிலையில், இவரை பற்றிய மற்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. திருமண வாழ்க்கையில் இணைந்துள்ள சாக்ஷி அகர்வாலுக்கு ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.