Por Trailer Review : இளசுகளின் மனதை கவர்ந்த தினுசான போர் ட்ரெய்லர்!
டேவிட், சோலோ, ஸ்வீட் காரம் காஃபி, நவரசா ஆந்தாலஜியில் எதிரி எனும் எபிசோடை இயக்கிய பிஜாய் நம்பியார் போர் எனும் படத்தை இயக்கியுள்ளார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபெண்களின் இதயதுடிப்பாக இருக்கும் அர்ஜூன் தாஸ், காலிதாஸ் ஜெயராம் ஆகியோர் நடிப்பில் ஹிந்தி, தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இப்படம் தயாராகியுள்ளது. இவர்களுடன் டிஜே பானு, சஞ்சனா நட்ராஜன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கல்லூரியில் இளைஞர்களுக்கு இடையே நடக்கும் மோதலை மையமாக வைத்து உருவாகியுள்ளது போர் திரைப்படம்.
இதுபோன்ற கதை கொண்ட படங்கள் முன்பு வந்திருந்தாலும், இதன் ட்ரெய்லரை பார்க்க ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறது. இந்த காலத்து இளைஞர்களுக்கு ஏற்ற படமாக இது அமையும்.
வைட் லென்ஸை உபயோகப்படுத்தி எடுக்கப்பட்ட அனமார்பிக் காட்சிகளை தியேட்டரில் பார்க்க வேற லெவலில் இருக்கும் என்பது தெரிகிறது.
வரும் மார்ச் 1 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -