Keerthy Suresh Photos இரண்டு நாளில் திருமணம்; 'FACE' மேகசீனுக்கு கீர்த்தி சுரேஷ் நடத்திய ஹாட் போட்டோ ஷூட் வைரல்!
மலையாள திரையுலகை சேர்ந்த நடிகை கீர்த்தி சுரேஷ் தன்னுடைய 32 வயதில் திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகீர்த்தி சுரேஷுக்கு இவருடைய நீண்ட நாள் காதலரான, ஆண்டனி தட்டில் என்பவருக்கும் டிசம்பர் 12-ஆம் தேதி கோவாவில் திருமணம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
கீர்த்தி திருமணம் செய்துகொள்ள உள்ள ஆண்டனி தட்டில், பள்ளி காலங்களில் இருந்தே கீர்த்தி சுரேஷுக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.
கல்லூரியில் ஒன்றாக படிக்கும் போது, இருவரும் காதலிக்க துவங்கினர். கீர்த்தி சுரேஷ் சினிமாவின் பக்கம் கவனம் செலுத்த துவங்கிய நிலையில், ஆண்டனி தட்டில் துபாயில் ஒரு தொழிலதிபராக உயர்ந்தார்.
கீர்த்தி சுரேஷ் குடும்பத்தை விட பல மடங்கு கோடீஸ்வரரான ஆண்டனி தட்டிலுக்கு, துபாயில் மட்டும் இன்றி கோவா, சென்னை போன்ற இடங்களிலும் சில ஹோட்டல்கள் உள்ளது.
ஆண்டனி தட்டிலின் சொந்த ஓட்டலில் தான் இவர்கள் இருவருக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு வாரமாகவே நடந்து வருகிறது.
இந்நிலையில் கீர்த்தி சுரேஷ், 'FACE' மேகசீனுக்கு கலக்கலான மாடர்ன் உடை அணிந்து போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். திருமணத்தை நெருக்கத்தில் வைத்து கொண்டு அட்டை படத்திற்கு ஹாட் போட்டோ ஷூட்டா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ், மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் கதாநாயகியாக மலையாள படங்களில் தான் அறிமுகமானார்.
தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக 'இது என்ன மாயம்' என்கிற படத்தில் நடித்தார்.
இவருடைய வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது, சாவித்திரி வாழ்க்கை கதையில் நடித்த மகாநடி திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
பேபி ஜான் திரைப்படம் மூலம் பாலிவுட் திரையுலகிலும் கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார். அந்த படம் டிசம்பர் 25-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -