Sobhita Dhulipala: சோபிதா திருமணத்தில் அணிந்திருந்த நகை த்ரிஷா - ஐஸ்வர்யா ராய் நகைகளின் காப்பியா? வைரலாகும் புகைப்படம்!
சோபிதா - நாக சைதன்யா திருமணம், டிசம்பர் 4 ஆம் தேதி நடந்து முடிந்தது. இதில் சோபிதா துலிபாலா அணிந்திருந்த நகைகள் மிகவும் பாரம்பரியமானதாகவும், தனித்துவமானதாகவும் இருந்ததாக ரசிகர்கள் கூறி வந்தனர்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆனால் இவர் அணிந்திருந்த சோக்கர் மற்றும் ஹாரம் ஆகியவை பொன்னியின் செல்வன் படத்தில் த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய் அணிந்திருந்த நகைகளை பார்த்து டிசைன் செய்யப்பட்டது என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம் இதனை உறுதி செய்யும் விதமாக சில புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில், நடித்த ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, சோபிதா மற்றும் நடிகர்கள் அனைவரும் அணிந்து நடித்த நகைகள் பெரும்பாலும் பிரபல நிறுவனம் பாரம்பரிய முறையில் டிசைன் செய்த தங்க நகைகள் தான். படத்தின் நடிக்கும் போதே சில நகைகளை பார்த்து கவர்த்திழுக்கப்பட்ட சோபிதா, தன்னுடைய திருமணத்திற்கு அதே போன்ற தங்க நகையை தான் டிசைன் செய்து வாங்கி அணிந்திருந்தார்.
எப்படி த்ரிஷா மற்றும் ஐஷவ்ர்யா ராய்க்கு அந்த நகைகள் மிகவும் அழகாகவும், பொருத்தமாகவும் இருந்ததோ அதே போல் சோபிதாவின் அழகையும் கூடியது இந்த நகைகள். சோபிதா அணிந்திருந்த நகைகள்சுமார் 300 சவரன் இருக்கும் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
தன்னுடைய திருமணத்திற்காக ஒவ்வொன்றையும் சோபிதா மற்றும் நாக சைதன்யா பார்த்து பார்த்து தேர்வு செய்தனர். சோபிதா தன்னுடைய காலில் தங்க கொலுசை அணிந்திருந்தார். இதுகுறித்த புகைப்படங்கள் கூட வெளியாகி வைரலானது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -