Ayalaan 2 : உருவாகிறது அயலான் 2..வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் எத்தனை கோடி பட்ஜெட் தெரியுமா?
இன்று நேற்று நாளை திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அயலான்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனோடு ரகுல் ப்ரீத் , கருணாகரன் , யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.
கடந்த ஜனவரி 12 ஆம் தேதி வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளுக்காக வெகுவாக பாரட்டப்பட்டது.
இதனை தொடர்ந்து இப்படத்தில் இரண்டாம் பாகம் குறித்த தகவல்கள் பரவிய வண்ணம் இருந்தது.
அயலான் படத்திற்கு வி.எஃப்.எக்ஸ் காட்சிகள் அமைத்த ஃபாண்டன் எஃப்.எக்ஸ் நிறுவனம் அயலான் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு படக்குழுவுடன் போட்டுள்ள ஒப்பந்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.
இதனால் அயலான் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் படமாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.