Avengers Endgame: அயர்ன் மேன் உலகை விட்டு பிரிந்த நாள் இன்று..அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் வெளியாகி 4 ஆண்டுகள் நிறைவு!
மார்வல் சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் கடைசியாக ஒன்றினைந்த படம், அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்.
பூமியை அழிக்க வரும் தானோஸ், சூப்பர் ஹீரோக்களுடன் போர் நடத்துவதுதான் கதைக்களமாக அமைக்கப்பட்டிருந்தது.
மக்களை காப்பாற்ற சூப்பர் ஹீரோக்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சண்டை போட்ட காட்சிகள் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தன.
கேப்டன் அமெரிக்கா, ப்ளாக் விடோ, டாக்டர் ஸ்ட்ரேஞ் என பலர் இந்த படத்தில் பறந்து பறந்து சண்டையிட்டிருப்பர்.
க்ளைமேக்ஸ் போர் காட்சிக்கென தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
ஐந்து இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ்களையும் தன் கையில் வைத்து சொடக்கு போட்டு இறந்து போனவர்களை மீண்டும் கொண்டு வருவதற்காக தனது உயிரை மாய்த்துக் கொள்வார், அயர்ன் மேன்.
அயர்ன் மேனின் இறப்புக்காட்சி ரசிகர்கள் அனைவரையும் கலங்க வைத்தது.
அயர்ன் மேனுடன் சேர்ந்து இப்படத்தில் உயிரிழக்கும் இன்னொரு சூப்பர் ஹீரோ, நடாஷா எனும் ப்ளாக் விடோ. சோல் ஸ்டோனை எடுப்பதற்காக இவர் தனது உயிரை மாய்த்துக் கொள்வார். அவெஞ்சர்ஸ் என்கேம் திரைப்படம் வெளியாகி நான்கு ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் அனைவரும் சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.