Tamil Movies : பாலக்காட்டு மாதவன் முதல் பாபநாசம் படம் வரை.. இன்று வெளியான தமிழ் படங்கள்!
1981 ஆம் ஆண்டு சந்தான பாரதி மற்றும் பி வாசு இயக்கத்தில் வெளிவந்த வந்த படம் பன்னீர் புஷ்பங்கள்.
இது பள்ளியில் படிக்கும் ஒரு மாணவ மாணவிக்கும் இடையில் ஏற்படும் காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் வெளியாகி 43 வருடங்களை நிறைவு செய்கிறது.
2015 ஆம் ஆண்டு சந்திரமோகன் இயக்கத்தில் விவேக் நடித்து வெளிவந்த படம் பாலக்காட்டு மாதவன்.
விவேக் மற்றும் சோனியா அகர்வாலுக்கு இடையில் வாடகை தாயாக ஒரு பாட்டி வருகிறார் அதன் பிறகு குடும்பத்தில் என்ன நடந்தது என்பதே மீத கதை. இப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
2015 ஆம் ஆண்டு ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளிவந்த படம் பாபநாசம். இப்படம் வெளியாகி இன்றுடன் 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
கமல்ஹாசன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி, மகள் சேர்ந்து ஒருவரை கொன்று விடுகின்றனர். அந்த கொலையை மறைத்து நாடகமாடி போலீஸிடம் இருந்து குடும்பத்தோடு எப்படி தப்பித்து சென்றனர் என்பதே படத்தின் கதை.