August Cine Updates : அப்டேட் மழையில் நனைய தயாரா? ஆகஸ்ட் மாத அப்டேட்ஸ் இதோ!
முதலாவதாக, நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் ட்ரெய்லர் இன்று மாலை வெளியாக உள்ளது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக தயாராக உள்ளது.
இரண்டாவதாக, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் லியோ படத்தில் அர்ஜுனும் நடிக்கிறார். அர்ஜுன் பிறந்த நாளான ஆகஸ்ட் 15ம் தேதியனறு அவரை பற்றிய கிளிம்ஸ் வீடியோ வெளியாகும் என பேசப்படுகிறது
மூன்றாவதாக, ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் எஸ்.டி.ஆர் 48 வது படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
நான்காவதாக, நடிகர் அஜித்குமார் நடிக்க உள்ள படம் விடாமுயற்சி. இதன் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது நடிகர் அஜித் ஐரோப்பா டிரிப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாவதாக, நடிகர் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்தின் பிரிவியூ ஏற்கனவே வெளியானது. தற்போது இப்படத்தின் பாடல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆறாவதாக, நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் படம் சாலார். இதன் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏழாவதாக, பி.வாசு இயக்கத்தில் உருவாகி வரும் சந்திரமுகி 2ம் பாகத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எட்டாவதாக, நடிகர் எஸ்.ஜே சூர்யா, விஷால் நடிக்கும் படம் மார்க் ஆண்டனி. இதன் டீசர் ஏற்கனவே வெளியானது. தற்போது இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் இம்மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்பதாவதாக, நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள படம் கிங் ஆப் கோதா. இதன் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாக உள்ளது.