LPL: அழையா விருந்தாளியாக மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் விளையாட்டை பார்த்து ரசித்த பாம்பு!

இந்தியாவில் ஐ.பி.எல். போட்டித்தொடர் நடத்தப்பட்டது போல், ஒவ்வொரு நாட்டிலும் வேறு வேறு பெயர்களில் டி20 கிரிக்கெட் தொடர் நடந்து வருகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In App
இலங்கையில் தி லங்கா பிரீமியர் லீக் என்ற பெயரில் டி20 போட்டி தற்போது தொடங்கியுள்ளது.

இலங்கையில் உள்ள கொழும்புவில் பிரேமதாசா மைதானத்தில் காலே டைட்டன்ஸ் – தம்புல்லா ஆரா அணிகள் நேருக்கு நேர் மோதின.
முதலில் களமிறங்கிய காலே டைட்டன்ஸ் சிறப்பாக ஆடி 180 ரன்கள் எடுத்தது. தம்புல்லா ஆரா அணி 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது.
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அழையா விருந்தாளியாக மைதானத்துக்கு வந்து ரசிகர்களுடன் விளையாட்டை பார்த்து ரசித்தது பாம்பு.
இதனால் ஆட்டம் சற்று நேரம் நிறுத்தப்பட்டு பாம்பை அகற்றிய பின்னர் தொடங்கப்பட்டது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -