Atlee : இவ்வளவு ஆடம்பரமா!..ஒரு குட்டி பார்ட்டிக்கு அட்லீ அணிந்த டீ ஷர்ட் விலையை பாருங்க
ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் அட்லீ. தொடர்ந்து தெறி , மெர்சல் , பிகிப் என விஜயை வைத்து அடுத்தடுத்து மூன்று ப்ளாக்ஸ் பஸ்டர் வெற்றிப்படங்களைக் கொடுத்தார்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்தியின் கடந்த ஆண்டு ஷாருக் கான் நடித்த ஜவான் படத்தை இயக்கினார் அட்லீ. இப்படம் உலகளவில் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து இந்தியளவில் அட்லீ முன்னணி இயக்குநராக உயர்த்தியது.
தற்போது இந்தியில் வருன் தவான் , கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள பேபி ஜான் படத்தை தயாரித்துள்ளார் அட்லீ. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் தயாரிப்பாளராகவும் களமிறங்க இருக்கிறார்கள் அட்லீ மற்றும் அவரது மனைவி.
சமீபத்தில் அட்லி அணிந்திருந்த ஆடை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பிரெஞ்சு பிராண்ட் கிவன்ஷை டீ ஷர்ட் ஒன்றை அட்லீ அணிந்திருந்தார். இந்த டீ ஷர்ட் மொத்த விலை 1 லட்சத்து 12 ஆயிரத்து 960 ரூபாய் என்பது குறிப்பிடத் தக்கது.
அட்லீ அணிந்திருந்த ஏர் ஜார்டன் டிராக் பேண்டின் விலை 6 ஆயிரத்து 376 ரூபாய்
அவர் அணிந்திருந்த ஷூவின் விலை 76 ஆயிரத்து 354 ரூபாய். மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 690 ரூபாய் மதிப்புள்ள ஆடையை அட்லீ ஒரு சின்ன பார்ட்டிக்கு அணிந்து சென்றது பேசுபொருளாகியுள்ளது
- - - - - - - - - Advertisement - - - - - - - - -