Mushroom Dosa: ஆரோக்கியமான காளான் மசாலா தோசை - ரெசிபி இதோ!
காளான் மசாலா தோசை: என்னென்ன தேவை?, தோசை மாவு - தேவையான அளவு, காளான் - 2 கப், உப்பு - தேவையான அளவு, எண்ணெய் - தேவையான அளவு, வெங்காயம் - 2, தக்காளி - 2, மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன், சீரக தூள் - ஒரு டீஸ்பூன். கரம் மசாலா - ஒரு டீஸ்பூன், இஞ்சி, பூண்டு பேஸ்ட் - ஒரு டேபிள் ஸ்பூன், பச்சை மிளகாய் - 2, நெய் - தேவையான அளவு,சீஸ் - தேவையான அளவு
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில் தோசைக்கு தேவையான மசாலாவை தயார் செய்து வைக்கலாம். வெங்காயம் தக்காளி ஆகியவற்றை பொடியாக நறுக்கி வைக்கவும். இப்போது கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கூடானதும், அதில் சீரகம்,பச்சை மிளகாய், வெங்காயம், இஞ்சி- பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு, தக்காளி சேர்த்து நன்றாக வதங்கியதும் உப்பு, மிள்காய் தூள், அரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். இதற்கு ஃப்ர்ஷ் க்ரீன்,சீஸ் கூட தேவையெனில் சேர்க்கலாம். ருசி நன்றாக இருக்கும். விருப்பம் இருப்பவர்கள் இரண்டு உருளைக்கிழங்கை வேகவைத்து சேர்க்கலாம்.
5 நிமிடங்கள் கொதித்ததும் அதில் நறுகிய காளான் சேர்த்து நன்றாக வதக்கவும். இப்போது இது நன்றாக கொதித்ததும் காளான் மசாலா தயார்.
காளான் மசாலா தோசை தயாரிக்க..தோசை கல்லில் தோசை ஊற்றி, அதன் மேல் காளான் மசாலா வைத்து தோசை பொன்னிறமாக வேக விடவும். சுவையான காளான் மசாலா தோசை தயார். நெய் சேர்த்து தோசை தயாரிப்பது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -