Thug Life : ஜெயம் ரவிக்கு பதிலாக தக் லைஃப் படத்தில் இணையும் அந்த நடிகர் இவர்தான்!
37 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் 'தக் லைஃப்'.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதிரிஷா, அபிராமி, நாசர், கௌதம் கார்த்திக், ஐஸ்வர்யா லட்சுமி, பங்கஜ் திரிபாதி, ஜோஜூ ஜார்ஜ், வையாபுரி உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
இப்படத்தில் ஜெயம் ரவி, துல்கர் சல்மான் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது.
ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக துல்கர் சல்மான் மற்றும் ஜெயம் ரவி விலகியதாக தகவல்கள் வெளியாகின.
துல்கர் சல்மான் கதாபாத்திரத்தில் நடிகர் சிம்பு 'தக் லைஃப்' படத்தில் இணைந்ததாக அதிகாரபூர்வமான தகவல் வெளியானது.
இன்று தக் லைஃப் படத்தில் நடிக்கும் சிம்புவின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், வீடியோவும் வெளியானது.
அதைத்தொடர்ந்து ஜெயம் ரவி கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கும் நடிகர் குறித்த தகவல் அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டினர்.
தற்போது ஜெயம் ரவிக்கு பதிலாக நடிகர் அசோக் செல்வன் ''தக் லைஃப்' படத்தில் இணைய போவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -