Arvind Swamy : சாக்லேட் பாய் முதல் அல்ட்ரா மாடர்ன் வில்லன் வரை... அரவிந்த் சுவாமியின் டாப் 5 படங்கள்!
90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவின் ஹார்ட்த்ரோப்பாக வலம் வந்த நடிகர் அரவிந்த் சுவாமியின் சிறந்த ஐந்து திரைப்படங்களை பார்க்கலாம் :
ரோஜா : 1992ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் ரிஷி என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த் சுவாமி நடித்த இப்படம் பாக்ஸ் ஆபீசில் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. காஷ்மீரில் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு பின்னர் அவர்களிடம் இருந்து எப்படி மீட்கப்படுகிறார் என்ற அழுத்தமான கதைக்களத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது.
பம்பாய் : 1995ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் சேகர் என்ற கதாபாத்திரத்தில் பத்திரிகையாளர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் ஜாதி கலவரத்தால் சிக்கி கொண்டு தவிக்கும் குடும்ப தலைவனாக நடித்திருந்தார்.
மறுபடியும் : பாலு மகேந்திரா இயக்கத்தில் 1993ம் ஆண்டு வெளியான இப்படத்தில் கௌரிஷங்கர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். திறமையான பாடகராக, நம்பகமான நண்பராக, சிக்கலான கதாபாத்திரத்தில் திறமையாக நடித்திருந்தார்.
மின்சார கனவு : ராஜீவ் மேனன் இயக்கத்தில் 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தில் தாமஸ் தங்கதுரை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முக்கோண காதல் கதையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் அரவிந்த் சுவாமி.
தனி ஒருவன் : மோகன் ராஜா இயக்கத்தில் 2015ம் ஆண்டு வெளியான இப்படத்தில் சித்தார்த் அபிமன்யு என்ற புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்ததுடன் சிறந்த துணை நடிகர், சிறந்த வில்லன் என்ற பிரிவுகளில் விருதுகளை பெற்றார்.