Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Potato Fry : சுவையான உருளைக்கிழங்கு பொரியல்.. சாம்பார், ரசம், தயிர் சாதத்திற்கு சூப்பராக இருக்கும்!
தேவையான பொருட்கள்: 1 கப் உருளைக்கிழங்கு , 1 தேக்கரண்டி கொத்தமல்லி , 2 காய்ந்த சிவப்பு மிளகாய், உப்பு , 2-3 தேக்கரண்டி எண்ணெய், கறிவேப்பிலைகள், மஞ்சள் தூள் ஒரு சிட்டிகை 1/4 தேக்கரண்டி கடுகு , 1/4 டீஸ்பூன் உளுத்தம் பருப்பு, கொத்தமல்லி இலைகள்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசெய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து உரித்து எடுத்துக்கொள்ளவும். பின் அதன் சின்ன சின்ன துண்டாக நறுக்கிக்கொள்ளவும்.
அடுத்தது கொத்தமல்லி , காய்ந்த மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.
அடுத்தது நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அரைத்த மசாலாவுடன் கலந்து கொள்ளவும்.அதன் பின் கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு உளுத்தம்பருப்பு சேர்த்து பொரியும் வரை காத்திருக்கவும்.
அடுத்தது கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பின் மசாலாவில் கலந்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து கிளறிவிடவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து 4 -5 நிமிடம் வரை மூடி வைக்கவும். கடைசியாக நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து இறக்கினால் காரசமான உருளைக்கிழங்கு பொரியல் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -