Aranmanai 4:சிறப்பு பாடலுக்கு நடனமாடிய குஷ்பு, சிம்ரன் -அரண்மனை 4 ஷூட்டிங் ஸ்பாட் க்ளிக்ஸ்..!
சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை படத்தில் வசூல் இரண்டாவது நாளில் எகிறியுள்ளதால் படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நடிகை குஷ்பு - டான்ஸ் மாஸ்டர் பிருந்தா இருவரும் ஷூட்டிங் ஸ்பாட்டில்...
ப்படத்தில் சுந்தர் சி, சந்தோஷ் பிரதாப், தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ், கோவை சரளா, லொள்ளு சபா சேஷூ என ஏகப்பட்ட பேர் நடித்துள்ளனர். ஹிப் ஹாப் ஆதி அரண்மனை 4 படத்துக்கு இசையமைத்துள்ளார். இதில் வரும் பாடலில் நடிகை சிம்ரம், குஷ்பு நடனமாடியுள்ளனர்.
அரண்மனை 4 படத்தில் இறுதியில் வரும் பாடலில் இருவரும் நடனமாடியது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குநர் சுந்தர் சி, நடிகை குஷ்பு, சிம்ரன், டான்ஸ் மாஸ்டர் பிருந்தா. இவர்கள் நல்ல நண்பர்களும் கூட...
பச்சை நிற ப்ளவுஸ், மஞ்சள் நிற சேலையுடன் சிம்ரனின் நடனம் ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்தது.
அரண்மனை 4 படம் முதல் நாளில் ரூ.4.15 கோடி வசூலை ஈட்டியது. 2வது நாளில் ரூ.6.42 கோடி வசூலை பெற்றுள்ளது. இரண்டு நாட்களில் ரூ.10 கோடி வசூலை பெற்றுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் தெலுங்கில் இரண்டு நாட்களில் ரூ.1.08 கோடி வசூலைப் பெற்றுள்ளது.
இருவருடைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.