AR Murugadoss Heros : சந்தித்து கொண்ட ஏ.ஆர்.முருகதாஸின் ஹீரோக்கள்..என்ன விஷயமாக இருக்கும்?
தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோவாக மாறிவிட்டார் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது, அவர் அமரன் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.
அமரன் படத்தை முடித்துவிட்டு சிவகார்த்திகேயன், ரமணா, துப்பாக்கி, கத்தி, , ஸ்பைடர் போன்ற ஹிட் படங்களை கொடுத்த இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணைத்து படம் நடிக்கவுள்ளார்.6
ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது பாலிவுட் நடிகர் சல்மான் கானை வைத்து சிக்கந்தர் என்ற படத்தை இயக்கி வருகிறார். சிக்கந்தர் படத்தில் ஹீரோயினாக ராஷ்மிகா மந்தனா நடிக்கவுள்ளதாகவும் அறிவிப்பு வந்துள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸின் ஹீரோக்கள் சிவகார்த்திகேயன்-சல்மான் கான் இருவரும் சந்தித்த போது எடுக்கப்பட்ட வீடியோ பரவி வருகிறது
இந்த சந்திப்பு, ஏ.ஆர் முருகதாஸ் இயக்கும் சிக்கந்தர் படத்தில் சிவகார்த்திகேயன் கேமியோ ரோலில் வருவதற்கான சந்திப்பாக கூட இருக்கலாம் என சொல்லப்படுகிறது
சல்மான் கான் படமான சிக்கந்தர், அடுத்த ஆண்டு ரமலான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள், ஏ ஆர் முருகதாஸ்- சிவகார்த்திகேயன் படம் வெளியாகலாம் என்றும் சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.