Dhruv Vikram : இவருக்கு ஜோடி இவர்தான்..மாரி செல்வராஜ் படக்குழு வெளியிட்ட லேட்டஸ்ட் அப்டேட்!
பரியேறும் பெருமாள்,கர்ணன், மாமன்னன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், துருவ் விக்ரமை வைத்து படம் இயக்கவுள்ளார்.
துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்கப்போவது யார்? என்ற கேள்வி நிலவி வந்த நிலையில், படக்குழு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு குழப்பத்தை போக்கியுள்ளது.
நீலம் புரொடக்ஷன் தயாரிப்பாளர் பா.ரஞ்சித், அப்ளாஸ் என்டர்டெய்ன்மென்ட் தயாரிப்பாளர்கள், துருவ் விக்ரம், மாரி செல்வராஜ் ஆகியோர் உள்ள இந்த புகைப்படத்தில் அனுபமா பரமேஸ்வரனும் உள்ளார். இதில் இருந்து அனுபமா, இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பது தெரிகிறது.
அர்ஜுனா விருது பெற்ற ‘மனத்தி’ கணேசன் என்ற கபடி வீரரின் வாழ்க்கையை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு வருகிறது.
மார்ச் 15 ஆம் தேதி தொடங்கும் இப்படத்தின் ஷூட் 80 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.