Alia on Ranbir : ‘ரன்பீர் நேர்மாறான குணத்தை கொண்டவர்..’ பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆலியா!
பாலிவுட் பிரபலங்களான ஆலியா பட் - ரன்பீர் கபூர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்கள் இருவரும் இணைந்து, பிரமாஸ்திரா படத்தின் முதல் பாகத்தில் நடித்தனர்.
2022 ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு ராஹா என்ற பெண் குழந்தை உள்ளது.
சில வாரங்களுக்கு முன்னர், ரன்பீர் குறித்து ஆலியா பேசிய வீடியோ ட்ரெண்டானது. “என் கணவருக்கு நான் லிப்ஸ்டிக் போட்டால் பிடிக்காது. அதனால் அவர் லிப்ஸ்டிக்கை அழிக்க சொல்வார்.” என பேசியிருப்பார். இந்த வீடியோ செம ட்ரெண்டானது. அதிலிருந்து ரன்பீர் மிகவும் டாக்ஸிக்கான நபர் என்று செய்திகள் வெளியானது.
ஆலியாவின் நெருங்கிய நண்பர் ஒருவர் இந்த விவகாரம் கையை மீறி செல்கிறது என அவரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், காஃபி வித் கரண் ஷோவில் பங்குபெற்ற ஆலியா இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
image 5
“உலகில் பல பிரச்சினைகள் நடந்து வருகிறது. உங்கள் கவனத்தை அதில் செலுத்துங்கள். ரன்பீரை பற்றி மக்கள் தப்பாக புரிந்துக்கொண்டுள்ளனர் என்பது எனக்கு வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. நீங்கள் அவரை தவறானவர் என்று நினைக்கிறீர்கள். ஆனால், அவர் அதற்கு நேர்மாறான குணத்தை கொண்டவர்.” என பேசியுள்ளார் ஆலியா.
தற்போது காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் ஆலியா பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.