Bigg Boss 7 : ஒரே இரவில் உலகளவில் ஃபேமஸான பாண்டியன் ஸ்டோர்ஸ் சரவண விக்ரம்!
இந்த வாரம் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் ‘உன்னை போல் ஒருவன்’டாஸ்க் சுவாரஸ்யமாக நடந்து வருகிறது. பிக்பாஸ் வீட்டில் ஆண்களின் பங்களிப்பு, பெண்களின் பங்களிப்பு பற்றி வேடிக்கையான விவாதம் நடந்து வந்தது.
அப்போது, பூர்ணிமா ரவி தினேஷ் போல் நடித்து காண்பித்து கொண்டிருந்தார். பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் யார் என்று கேட்ட போது, “விக்ரம்” என பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் சரவண விக்ரம் தன் பெயரை கூறினார்.
இதற்கு முன்பாக இரவு நேரத்தில், “பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் சரவண விக்ரம்” என தனக்கு தானே சொல்லிக்கொண்டார். இவர் செய்வதை பார்க்கும் போது சற்று சிரிப்பு வந்தாலும் அவரின் தன்னம்பிக்கையை நாம் பாராட்டிதான் ஆக வேண்டும்.
முதல் ப்ரோமோவில் சரவண விக்ரம் ஹைலைட்டாக தெரிந்த பின், அதை தொடர்ந்து வந்த இரண்டாவது ப்ரோமோவிலும் இவரை பற்றியே சக போட்டியாளர்கள் பேசினர்.
கோல்ட் ஸ்டாரை மணிக்கு கொடுத்ததால் சற்று கடுப்பான மாயா, “மணியை விட விக்ரம் நல்ல போட்டியாளர்..அவருக்கு ஸ்டார் கொடுத்து இருக்கலாம்” என பேசினார்.
முதல் இரண்டு ப்ரோமோக்களில் தனி இடத்தை பிடித்த சரவண விக்ரம், தற்போது எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகி வருகிறார்.