Merry Christmas : அடுத்த ஆண்டின் பொங்கலுக்கு ரிலீஸாகும் மெரி கிறிஸ்துமஸ் படம்!
லவ் பேர்ட்ஸ், கோகுலத்தில் சீதை, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி, புதுப்பேட்டைச், லீ, வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல ஆகிய பல படங்களில் பின்னணி நடிகராக நடித்து வந்த விஜய் சேதுபதி தென்மேற்கு பருவக்காற்று படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.
தனது இயல்பான நடிப்பாலும் கடின உழைப்பாலும் பல படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். தமிழ் சினிமாவை தாண்டி மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
அந்த வகையில், பிரபல பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுடன் இணைந்து மெரி கிறிஸ்துமஸ் எனும் படத்தில் நடித்துள்ளார்.
மாபெரும் ஹிட்டான‘அந்தாதூன்’ படத்தை இயக்கிய ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில், தமிழ்,ஹிந்தி என இரு மொழிகளில் இப்படம் தயாராகியுள்ளது
ஷூட்டிங் பணிகள் முடிவடையாததால் 2022 ஆம் ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வெளியாகவிருந்த படம், இந்த ஆண்டின் கிறிஸ்துமஸூக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது.
தற்போது, இந்த படம் 2024 ஆம் ஆண்டின் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி மாதம் 12 ஆம் தேதி வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வந்துள்ளது.