AK63 update : எக்ஸ் தளத்தில் ட்ரெண்டாகும் AK63..அஜித் ரசிகர்கள் உற்சாகம் !

அஜித் - ஆதிக் ரவிச்சந்திரன் - தேவி ஸ்ரீ பிரசாத்
கடந்த ஆண்டு வெளியான 'துணிவு' திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் 'விடாமுயற்சி'.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜுன், ஆரவ் நடிப்பில் உருவாகும் இப்படம் அஜித்தின் 62வது திரைப்படமாகும்.
லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தை தொடர்ந்து AK63 படத்தின் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் AK63 திரைப்படம் உருவாக உள்ளது என தகவல் பரவி வருகிறது
விடாமுயற்சி மற்றும் AK63 படம் குறித்த மேலும் பல தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.