Summer Foods : வெயில் காலத்தில் உடலை கூலாக வைத்திருக்கும் சூப்பர் உணவுகள்!
மார்ச் மாதத்திலே வெயில் பொளந்து கட்ட ஆரம்பித்துவிட்டது. இதுபோன்ற சூழலில் உடலை காக்க என்ன சாப்பிட வேண்டும் என்பதை காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதர்பூசணி கோடை காலத்திற்கேற்ற பழமாகும். இந்த பழத்தில் நீர்ச்சத்து நிறைந்து காணப்படுகிறது. மேலும் உடல் சூட்டை குறைக்கும் உணவுகளுள் ஒன்று. வெளிப்புற வெப்பத்தை எதிர்த்து உடலின் உட்புற வெப்பநிலையை குறைக்கும்.
தர்பூசணியைப் போலவே, வெள்ளரிக்காயிலும் அதிக அளவு நீர்ச்சத்து உள்ளது. இது சிறந்த குளிர்ச்சியான உணவுகளில் ஒன்றாகும். வெள்ளரிக்காயில் மலச்சிக்கலைப் போக்கக்கூடிய நார்ச்சத்தும் நிறைந்துள்ளது. வெள்ளரியை சாலடாகவோ, ஜூஸாகவோ சாப்பிடலாம்.
உடல் சூடாக இருந்தால், இளநீர் உடனடியாக வெப்பத்தை தணிக்க உதவும். இது உங்கள் உடலை ஹைட்ரேட் செய்து, எலக்ட்ரோலைட்டுகளை சமநிலைப்படுத்தும் குளிர்ச்சியான பண்புகளைக் கொண்டுள்ளது. இளநீர், உடலை புத்துணர்ச்சியாக்கும். உடற்பயிற்சியின் பின்னர் உங்கள் உடலை அதன் இயல்பான நிலைக்கு கொண்டு வரும்.
உடலில் வெப்பத்தின் குறைக்க, புதினாவும் உதவுகிறது. உணவுகளிலும், பழச்சாறுகளிலும் சேர்க்கலாம். தேநீராகவும் குடிக்கலாம். இதில் சட்னியும் செய்யலாம்.
ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி நிறைந்த ப்ளுபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்ற பெர்ரிகள் உடல் சூட்டை குறைக்க உதவுகிறது.
எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இந்த பழங்களில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. அவை உங்கள் உடலை குளிர்ச்சியாக்க உதவுகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -