VidaaMuyarchi Shooting Update : அடுத்த மாதம் தொடங்கவிருக்கும் விடாமுயற்சி ஷூட்.. சந்தோஷ கடலில் மூழ்கிய அஜித் ரசிகர்கள்!
துணிவு படத்தின் அமோக வெற்றிக்கு பிறகு லைகா தயாரிப்பில் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வந்தது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇப்படத்திற்கு விடாமுயற்சி என்று பெயரிடப்பட்டது.
படத்தின் போஸ்டரை, அஜித்குமார் பிறந்த நாளான மே 1ஆம் தேதியன்று தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது.
படத்தின் பெயருடன் போஸ்டர் வந்த பிறகு, எந்தவொரு அப்டேட்டும் வரவில்லை. இதனால் படத்தின் ஷூட் எப்போது தொடங்கும் என்ற கேள்வியை மக்கள் கேட்க ஆரம்பித்தனர்.
இதற்கிடையில் விடாமுயற்சி படம் பாதியிலேயே கைவிடப்பட்டது என்ற தகவல் இணையத்தில் பரவியதால் அஜித் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தார்கள்.
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் இத்திரைப்படம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்திற்கு முக்கியமான திரைப்படம் என்று சுபாஸ்கரன் திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்நிலையில், அக்டோபர் இரண்டாம் தேதி முதல் விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என தகவல் பரவி வருகிறது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -