Silk Smitha : இந்தியா காந்தியோடு சில்க் ஸ்மிதாவை ஒப்பிடலாமா..சில்க் ஸ்மிதா பட டீசருக்கு எதிர்ப்பு
1960ஆம் ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி ஆந்திர மாநிலம், ஏலூரு கிராமத்தில் ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த விஜயலட்சுமி நான்காவது வரை மட்டும் படித்தவர். திரைப்படங்களில் வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருந்த அவரை வண்டிச்சக்கரம் என்ற திரைப்படத்தில் சில்க் என்ற கதாப்பாத்திரத்தில் அறிமுகம் செய்தார் வினு சக்கரவர்த்தி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசுமார் 17 ஆண்டுகால திரைப்பயணத்தில் ஆண்டுக்கு 20 படங்கள் என்ற எணிக்கையில் 450க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து தென் இந்திய ரசிகர்களின் மனதில் இன்றும் நிலைத்து நிற்பவர் சில்க் ஸ்மிதா
சில்க் ஸ்மிதா மறைந்து 27 ஆண்டுகள் கடந்தும் இன்றும் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். ஹாலிவுட்டில் மோனிகா பெல்லூச்சி , மெர்லின் மட்ன்றோ எப்படியோ அப்படிதான் தமிழ் ரசிகர்களுக்கு சில்க் ஸ்மிதா.
இந்த டீசரில் எப்படி இந்திரா காந்தியை இந்தியாவின் இரும்பு மனிதி என்று அழைக்கிறார்களோ அதேபோல் சில்ஸ் ஸ்மிதாவை இந்தியாவின் மேக்னெட்டிக் லேடி என்று அழைப்பார்கள் என்கிற வசனம் இடம்பெற்றுள்ளது. இந்திரா காந்தியையும் சில்க் ஸ்மிதாவவையும் ஒப்பிடடும் இந்த வசனத்திற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்தியில் சில்க் ஸ்மிதா வாழ்க்கையைப் பற்றி படம் வந்தாலும் இதுவரை தமிழில் சில்க் ஸ்மிதா வாக்கையை மையப்படுத்தி முழுமையான ஒரு படம் வெளியாகவில்லை. இதற்கான முயற்சிகளை பலர் முன்னெடுத்து இருக்கிறார்கள் ஆனால் சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை முழுமையாக திரையில் கொண்டு வருவது என்பது ஒரு சவாலான காரியம்.
அந்த வகையில் தற்போது ஜெயம்ராம் என்பவர் இயக்கத்தில் இருட்டு அறையில் முரட்டு குத்து நடிகை சந்திரிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ' சில்க் ஸ்மிதா : குயின் ஆப் தி சவுத்' திரைப்படம் , நேற்று டிசம்பர் 2 ஆம் தேதி சில்க் ஸ்மிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் முன்னோட்டம் வெளியானது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -