22 years of citizen : ‘ஏலே கலக்டரு வயிரு எரிதுல..’ காணாமல் போன அத்திப்பட்டி.. கண்டுபிடித்த சிட்டிசன்!
சரவண சுப்பையா இயக்கிய ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமான சிட்டிசன் 2001இல் திரைக்கு வந்தது.
சிட்டிசன் படம் அஜித்தின் கேரியரில் ஒரு மைல்கல்லாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அரசியல்வாதி, வழக்கறிஞர், காவல் துறை அதிகாரி என ஒரு படத்திற்காக படல் கெட்-அப் போட்டு அசத்தினார் அஜித்.
இப்படத்தில் மீனா, வசுந்தரா தாஸ், நக்மா, நிழல்கள் ரவி, பாண்டியன், தேவன் மற்றும் அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடித்தனர்.
தேவாவின் இசையில் உருவான சிக்கிமுக்கி கல்லு, ஐ லைக் யூ, பூக்காரா பூக்காரா, மேற்கே விதைத்த சூரியனே உள்ளிட்ட பாடல்கள் செம ஹிட்டானது.
2000 இல் ஹே ராம் மூலம் நடிகையாக அறிமுகமான வசுந்தரா தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் சமீரா ரெட்டி நடிக்கவிருந்தாராம்.
இப்படத்தில் தமிழ்நாட்டின் வரைபடத்தில் இருந்து காணாமல் போகும் கற்பனையான அத்திப்பட்டி கிராமத்தின் காட்சிகள் சென்னையின் புறநகரில் உள்ள புலிகாட்டில் (Pulicat) படமாக்கப்பட்டது.