Mugello 12H கார் ரேஸில் சாதித்து காட்டிய அஜித்தின் ரேஸிங் அணி! 3-ஆவது இடம் பிடித்து அசத்தல்!
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகராக இருக்கும் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான 'விடாமுயற்சி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் போனது.
இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி இருந்த இந்த படம், மோசமான தோல்வியை சந்தித்தது, ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்த நிலையில், அடுத்ததாக அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லி' திரைப்படம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக... விடாமுயற்சி படத்தில் நடித்திருந்த திரிஷா நடித்துள்ளார். விடாமுயற்சி ஏமாற்றத்தை கொடுத்தாலும், 'குட் பேட் அக்லி' ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என எதிர்பார்க்கின்றனர். இந்த ஆண்டு அஜித் நடிப்பில் வெளியாக உள்ள இரண்டாவது திரைப்படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், அஜித் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை தரும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. தற்போது கார் ரேஸில் தீவிரம் காட்டி வரும் அஜித், ஏற்கனவே துபாயில் நடந்த 24H கார் ரேஸில் கலந்து கொண்டும், 3-ஆவது இடத்தை பிடித்த நிலையில், மற்றொரு கார் ரேசியிலும் அஜித்தின் ரேஸிங் அணி கார் பந்தயத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இத்தாலியில் நடந்த Mugello 12H கார் ரேஸ் போட்டியில் அஜித்தின் ரேஸிங் அணி பங்கேற்றது. இந்த போட்டியில் அஜித்தின் டீம் GT992 பிரிவில் மூன்றாம் இடம் பிடித்து சாதனை செய்துள்ளது. இந்த வெற்றியை தொடர்ந்து, அஜித் பரிசை வாங்க மேடையில் ஏறும் போது இந்திய கொடியுடன் சென்று நம் நாட்டையும் பெருமை படுத்தியுள்ளார்.
மேலும் அஜித் இந்த வெற்றியை கொண்டாடியபோது எடுத்து கொண்ட போட்டோஸ் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதே போல் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் அஜித்துக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.