Aadvik Ajithkumar: ஒரே ரத்தம் அப்படி தான் இருக்கும்; அப்பா அஜித்தை போல் கார் ரேஸுக்கு பயிற்சி எடுக்கும் ஆத்விக் - வைரல் போட்டோஸ்!
கார் மற்றும் பைக் ரேஸ் மீது காதல் கொண்ட அஜித், தற்போது குறுகிய காலம் வரையில் சினிமாவிற்கு பிரேக் விட்டிருக்கிறார். அவர் தனது முழு கவனத்தையும் கார் ரேஸ் மீது செலுத்தி வருகிறார். ஏற்கனவே துபாய் கார் ரேஸில் அஜித் தலைமையிலான அணி 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது. இதையடுத்து இத்தாலியில் நடைபெற்ற கார் ரேஸில் அஜித்தின் அணி 3ஆவது இடம் பிடித்து சாதனை படைத்தது.
இந்த நிலையில் அஜித்தைப் போன்று இப்போது அவரது மகன் ஆத்விக்கும் கார் ரேஸில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். ஏற்கனவே பள்ளியில் நடைபெற்ற ரன்னிங் ரேஸ் போட்டியில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். அதே போல் கால்பந்து, கோ கார்ட் ரேஸ் போன்ற விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்த நிலையில், மிகா கார்டிங் அரங்கில் அஜித் தனது மகன் ஆத்விக்கிற்கு கார் ஓட்ட பயிற்சி அளித்து வருகிறார். அஜித் சொல்வது போன்று கேட்டு ஆத்விக்கும் அதற்கேற்ப கார் ஓட்டுவது போன்ற வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் ஷாலினி அஜித்தும் கூட உள்ளார்.
இதை பார்த்து ரசிகர்கள், ஒரே ரத்தம் அப்படிதான் இருக்கும் என கமெண்ட் போட்டு கொண்டாடி வருகிறார்கள். மேலும் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள 'குட் பேட் அக்லீ' திரைப்படம், இந்த மாதம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.