✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Samantha Temple: கடவுளான மாறிய சமந்தா; கோயில் கட்டி பூஜை பண்ணும் ரசிகர்; எங்கு தெரியுமா?

மணிகண்டன்   |  02 Apr 2025 10:47 PM (IST)
1

பொதுவாக பிரபலங்களை ரசிகர்கள் தங்களது கடவுளாக நினைப்பது உண்டு. அவர்களது படங்கள் வெளியாகும் போது பேனர் வைப்பது, கட் அவுட் வைப்பது என்று ரசிகர்கள் செய்யும் அளப்பறைக்கு அளவே இருக்காது. அதுமட்டுமின்றி அவர்களது பேனர், கட் அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் செய்து அவர்களின் படங்களை கொண்டாடுவார்கள். இன்னும் சில ரசிகர்கள் அவர்களது புகைப்படங்களை டாட்டூவாக போட்டுக் கொள்வார்கள்.

2

இப்படியும் சில ரசிகர்கள் இருக்கும் நிலையில், ஒரு சில ரசிகர் சற்று வித்தியாசமாக நடிகைக்கு கோயில் எழுப்பி வழிபட துவங்கி விடுகிறார்கள். ஏற்கனவே குஷ்பு, ஹன்சிகா மற்றும் நமீதாவிற்கு ரசிகர்கள் கோயில் எழுப்பி கடவுளாக வழிபடும் நிலையில், இப்போது சமந்தாவிற்கும் கோயில் கட்டப்பட்டுள்ளது.

3

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சமந்தா இப்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்துள்ளார். கடந்த 2023 ஆம் ஆண்டு சமந்தா நடிப்பில் வெளியான 'சாகுந்தலம்' மற்றும் குஷி ஆகிய படங்களுக்கு பிறகு இப்போது 'மா இண்டி பங்காரம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.

4

இந்தப் படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் சமந்தாவிற்கு ரசிகர் ஒருவர் கோயில் எழுப்பி அவரை கடவுளாக வழிபட்டு வருகிறார்.

5

ஆந்திரா மாநிலம் தெனாலியில் வசிக்கும் ரசிகர் ஒருவர் தனது பகுதியில் சமந்தாவிற்கு கோயில் எழுப்பியிருக்கிறார். இதில் சமந்தாவின் மார்பளவு சிலையை நிறுவி அவரை கடவுளாக பாவித்து வழிபட்டு வருகிறார்.

6

மேலும் இந்த கோயிலுக்கு சமந்தா கோயில் என்று பெயரிட்டுள்ளார். சமந்தாவிற்கு கோயில் எழுப்பியதைத் தொடர்ந்து அந்த பகுதி மக்கள் ஆச்சரியமாக பார்ப்பதோடு கோயிலுக்கு சென்று செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

  • முகப்பு
  • புகைப்படங்கள்
  • பொழுதுபோக்கு
  • Samantha Temple: கடவுளான மாறிய சமந்தா; கோயில் கட்டி பூஜை பண்ணும் ரசிகர்; எங்கு தெரியுமா?
About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.